2 மில்லியன் மக்கள் மரணத்தின் பிடியில்... கடுங்கோபத்தை எதிர்கொள்ளவிருக்கும் பலம் பொருந்திய நாட்டின் ஜனாதிபதி
கொரோனா இல்லாத நிலையை உருவாக்கும் கடும்போக்கு நடவடிக்கையை சீனத்து ஜனாதிபதி கைவிட்டதால் எதிர்வரும் மாதங்களில் சுமார் 2.1 மில்லியன் மக்கள் அந்த நாட்டில் மரணமடையலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மிக மோசமான சவால்
குறித்த பேரழிவானது சீனத்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் எதிர்கொள்ளவிருக்கும் மிக மோசமான சவால் மட்டுமின்றி, அவரது தொடர் ஆட்சிக்கு வேட்டு வைக்கும் காரணமாகவும் அமையலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
@reuters
கொரோனா தொற்றில்லாத நிலை என்ற சீனாவின் கடும்போக்கு திட்டமானது, நகரின் மக்கள் தொகையில் சிலருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டால், மொத்த மக்களும் தொடர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான ஊரடங்கு விதிகளுக்கும் இலக்காகினர்.
மக்கள் குடியிருப்புகளில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். லேசான அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட குடும்பத்தினரின் குடியிருப்புகள் வெளியே பூட்டப்பட்டு அரசாங்க முத்திரை பதிக்கப்பட்டது.
@afp
ஆனால், பொறுமை காத்த மக்கள், இறுதியில் வீதியில் இறங்கி போராட முடிவு செய்ததும், தனிமைப்படுத்தலின்போது 10 பேர் உடல் கருகி இறந்ததும், சீன நிர்வாகத்தின் மீது மக்களின் கோபம் திரும்பியது.
2.1 மில்லியன் மக்கள் இறப்பார்கள்
இதனையடுத்து சீன ஜனாதிபதி குறித்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். ஆனால் அதன் பின்னர் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதுடன், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் சீனாவில் 1.3 முதல் 2.1 மில்லியன் மக்கள் கொரோனா பாதிப்பால் இறப்பார்கள் என ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதாவது, தற்போது சீனாவில் 167 முதல் 279 மில்லியன் மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அங்குள்ள மருத்துவ சுகாதார கட்டமைப்பை கருத்தில் கொண்டு, 2.1 மில்லியன் மக்கள் வரையில் இறக்க நேரிடலாம் என கணித்துள்ளனர்.
@reuters
இந்த இறப்பானது அடுத்த மூன்று மாதங்களில் நிகழும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டிசம்பர் இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் எனவும், இதனால் ஜனவரியில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழல் 2023ல் சீனத்து ஜனாதிபதி எதிகொள்ளவிருக்கும் மிக மோசமான சவாலாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா முதல் முதலில் அடையாளம் காணப்பட்ட சீனாவில் 1.89 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதுடன், 5235 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
ஆனால், சீனா அளவுக்கு மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 531,614 பேர் இறந்ததுடன், அமெரிக்காவில் 1.08 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.