ஏழு கொலைகள், கொள்ளை, மிரட்டல்... வெளிநாடொன்றில் பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
ஏழு கொலைகள், கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் என சீரியல் கில்லராக வலம் வந்த பெண் ஒருவருக்கு சீனா மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.
காதலருடன் சேர்ந்து குற்றச்செயல்கள்
1996க்கும் 1999க்கும் இடையில், Lao Rongzhi என்னும் பெண், தன் காதலரான Fa Ziying என்பவருடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
கேளிக்கை விடுதிகளில் Lao Rongzhi தாங்கள் கொல்லப்போகும் ஆட்களை சந்தித்துக் கவர்ந்து வர, அவர்களை Fa Ziying கொலை செய்துள்ளார்.
ஆட்களைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டுவது, கொலை கொள்ளை என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட Lao Rongzhi, ஒரு குழந்தை உட்பட ஏழு பேரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
20 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை
Lao Rongzhi, 20 ஆண்டுகள் தலைமறைவாக வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்துவந்த நிலையில், சீனாவின் Fujian மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு பொலிசில் சிக்கியுள்ளார்.
இன்று காலை சீனாவிலுள்ள Nanchang என்னுமிடத்தில், Lao Rongzhiக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு ஆதரவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும், Lao Rongzhiயின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதுடன், அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |