நீண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு... உலக மக்களுக்கு மீண்டும் பயத்தை ஏற்படுத்தும் சீனா
கோவிட் பெருந்தொற்றால் உலக நாடுகள் மொத்தமாக ஸ்தம்பித்ததன் பின்னர், நீண்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இன்னொரு வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக
HMPV என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த தொற்றானது, சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளின் அடிப்படையில், மிக வேகமாக பரவி வருவதாகவே தகவல் கசிந்துள்ளது.
சிலர் குறிப்பிடுகையில், மருத்துவமனைகளும் தகன மையங்களும் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள காணொளிகளில், மருத்துவமனைகளில் மக்கள் சிகிச்சைக்காக காத்திருப்பதும்,
சில சமூக ஊடகப் பயனர்களில் தெரிவிக்கையில், கோவிட், குளிர் காய்ச்சல் உட்பட பல்வேறு தொற்றுநோய்கள் பரவுவதாகவே குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, சீனா அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியதாகக் கூட தகவல் கசிந்துள்ளது.
ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை. HMPV என்பது குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளது, இதில் கோவிட் அறிகுறிகளும் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பல மாகாணங்களில் வைரஸ் பரவி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர் என்றே உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சிறார்களுக்கான மருத்துவமனைகள் குறிப்பாக நிமோனியா மற்றும் வெள்ளை நுரையீரல் பாதிப்புகளால் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக சமூக ஊடகப் பயனர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
சுவாச தொற்று நோய்களால்
இந்த நிலையில், சீனாவின் நோய் கட்டுப்பாட்டு ஆணையம் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாளம் காணப்படாத நிமோனியா போன்ற தொற்று தொடர்பில் ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது, சில சுவாச நோய்களின் பாதிப்பு எண்ணிக்கை குளிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என விளக்கமளித்துள்ளனர்.
மேலும், தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம், ஆய்வகங்கள் அறிக்கை செய்வதற்கும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகமைகள் பாதிப்பு எண்ணிக்கையை சரிபார்த்து கையாள்வதற்கும் ஒரு நடைமுறையை நிறுவும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, டிசம்பர் 16 முதல் 22 வரையான வாரத்தில் சுவாச சம்பந்தமான நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
பொதுவாகவே குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் சீன மக்கள் பல்வேறு சுவாச தொற்று நோய்களால் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்று என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், கடந்த ஆன்ண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை தற்போது வரையில் குறைவேகவே காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் இருந்து எண்ணிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |