பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி குடிமக்களுக்கு விசா தேவையில்லை: உலகின் 2வது பெரிய பொருளாதார நாடு அறிவிப்பு
பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
சீன சுற்றுலா துறை ஊக்குவிப்பு
கோவிட் பாதிப்புகளுக்கு பிறகு உலகின் இரண்டாவது பொருளாதார நாடான சீனாவில் சுற்றுலா துறையானது மிகவும் சரிவை சந்தித்து வருகிறது.
அதை மீட்க சீனா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், முதற்கட்டமாக வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய கொரோனா பரிசோதனை ஆகியவற்றை தளர்த்தி இருந்தது.
Reuters
இதனை தொடர்ந்து கடந்த மாதங்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பல சர்வதேச விமான பாதைகளை சீனா மீண்டும் திறந்தது.
விசா இல்லாத அனுமதி
இந்நிலையில் சீனாவின் சுற்றுலா துறை கூடுதலாக ஊக்குவிப்பதற்காக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய முக்கிய ஐரோப்பிய நாடுகளின் மக்களுக்கு விசா நடைமுறையில் இருந்து சீனா விலக்கு அளித்துள்ளது.
இந்த நடைமுறை 2023 டிசம்பர் 1ம் திகதி முதல் 2024ம் ஆண்டு நவம்பர் 30ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reuters
இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், இந்த ஆண்டு டிசம்பர் 1ம் திகதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 31ம் திகதி வரை மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்த குடிமக்கள் 15 நாட்களுக்கு உள்ளாக வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர் உடனான சந்திப்பு ஆகிய காரணங்களுக்காக சீனாவுக்கு வர வேண்டும் என்றால் அவர்களுக்கு விசா தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
china, tourism, visa free, travelers,