முதன் முதலாக குடிமகன் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பிய சீனா!
சீனா முதன் முறையாக குடிமகன் ஒருவரோடு, மூன்று பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
ஜிகுவான் செயற்கை கோள்
சீனா நாட்டில் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சிகளில் புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மே 30ஆம் திகதி வடமேற்கு சீனாவிலுள்ள ஜிகுவான் செயற்கோள் ஏவுதல் மையத்திலிருந்து சீன குடிமகன் உட்பட, மூன்று பேரை ஒருவரை சீனாவில் இருந்து சந்திரனுக்கு ஒரு குழுவினரை அனுப்பும் திட்டத்தை தொடரும் நிலையில், மூன்று பேர் கொண்ட குழுவினரை டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது.
@afp
மேலும் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்காக, சீனா பில்லியன் கணக்கன டொலர்களை முதலீடு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஷென்சோ-16
இந்நிலையில் வடமேற்கு சீனாவிலுள்ள ஜியுகுவான் செயற்கைகோள் வெளியீட்டு மையத்திலிருந்து, காலை சரியாக 9.31 மணிக்கு மூன்று பேர் கொண்ட ஷென்சோ-16 குழுவினர் ராக்கெட்டில் புறப்பட்டனர் என AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
@ap
ராக்கெட் வெற்றிகரமாகஇலக்கை சென்றடைந்து விட்டதாகவும், விண்வெளி வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர் எனவும் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தின் இயக்குனர், ஜூ லிபெங் கூறியுள்ளார்.
இதன் மூலம் மனிதர்களை விண்வெளி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்திய மூன்றாவது நாடாக, சீனா இடம்பெற்றுள்ளது.
@afp
இது டியாங்காங் அதன் விண்வெளித் திட்டத்தின் மகுடம் ஆகும், இது செவ்வாய் மற்றும் சந்திரனில் ரோபோ ரோவர்களையும் தரையிறக்கியுள்ளது.
இதனிடையே வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.