இனி 2 மணி நேரம் மட்டும் தான்..!சீனாவில் சிறுவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு
சீனாவில் சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை அந்த நாட்டு அரசாங்கம் விதித்துள்ளது.
குழந்தைகளுக்கான ஆன்லைன் கட்டுப்பாடு
சீனாவில் இளம் தலைமுறையினர் இணைய பயன்பாட்டுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு முதலே பல்வேறு ஆன்லைன் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் நடைமுறை படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை சீனாவின் சைபர்பேஸ் அமைச்சகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
getty
அதன் படி, சீனாவில் 18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போன்களில் இணைய சேவையை பெற முடியாது.
16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த முடியும்.
8 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் மட்டுமே இணைய சேவையை பயன்படுத்த முடியும்.
இதைப்போல 8 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே இணைய சேவையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிவிலக்கு
இதில் குழந்தைகளின் மனநலம் மற்றும் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படும் சில செயலிகளுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அவை எந்தெந்த செயலிகள் என்ற பட்டியலை சீனாவின் சைபர்பேஸ் அமைச்சகம் வெளியிடவில்லை.
மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் எப்போது முதல் அமுல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |