இந்தியாவுடன் சீனா இணைந்து பணியாற்ற தயார்: வாங் யி - ஜெய்ஷங்கர் நேரடி சந்திப்பு
இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் (SCO) வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாட்டில், சீன வெளிவிவகாரத்துறை அமைச்சர் வாங் யி மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் சந்தித்து முக்கிய உரையாடலை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, “வேறுபாடுகள் சண்டையாகக்கூடாது; போட்டி எப்போதும் மோதலாக மாறக்கூடாது” என ஜெய்ஷங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த வாங் யி, “இந்தியா-சீனா உறவில் பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் சமாதானம் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
சர்வதேச வர்த்தக முறையை பாதுகாக்க சீனா விருப்பம் காட்டுவதாகவும், உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியின் நிலைத்தன்மையை இந்தியாவுடன் இணைந்து பாதுகாப்பதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் வாங் யி தெரிவித்தார்.
ஜெய்ஷங்கர் கூறுகையில், “இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் கடந்த ஒன்பது மாதங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தியுள்ளது” என தெரிவித்தார்.
இந்தியா-சீனாவுக்கு இடையே 75 ஆண்டுகளாக வெளிநாடுகளுடன் டிப்லோமாடிக் உறவுகள் நீடித்து வருவதை அவர் குறிப்பிட்டார்.
“இந்தியா மற்றும் சீனாவுக்கிடையே நிலையான மற்றும் நேர்மையான உறவு, உலகம் முழுவதும் நன்மை தரும்” என்றும் ஜெய்ஷங்கர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India China SCO 2025, Wang Yi Jaishankar meeting, SCO foreign ministers meet, India China border resolution, Wang Yi India cooperation, Jaishankar on China relations, India China diplomatic talks