இந்தியாவையும் ஆட்சி செய்யும் சீனா! தொடர்ந்து எழும் சர்ச்சைகள்
இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன பெயர்களை சீன அரசாங்கம் சூட்டியுள்ளது.
இந்தியாவை ஆட்சி செய்ய நினைக்கும் சீனா
அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்டும் வகையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன அரசாங்கம் பெயர் வைத்துள்ளது.
நிர்வாகப் பிரிவுகளை நிறுவுவதற்கும் பெயரிடுவதற்கும் பொறுப்பான சீன சிவில் விவகார அமைச்சகம், பெயர்களின் நான்காவது பட்டியலை வெளியிட்டுள்ளது.
சீனாவால் மறுபெயரிடப்பட்ட இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு நிலப்பகுதி ஆகியவை அடங்கியுள்ளன.
கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" (Zangnan) பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.
கடந்த 2017, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டிலும் சீனா புதிய பெயரை மாற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு நான்காவது முறையாகவும் புதிய பெயரை அறிவித்துள்ளது. இதனால் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெய்சங்கர்
இடத்தின் பெயரை மாற்றுவதால் அதன் உரிமை மாறிவிடாது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் செயலுக்கு, மோடி அரசாங்கம் பேச்சுவார்த்தையால் தீர்வு காண முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சுட்டிக்காட்டி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |