உலகின் எந்த மூலைக்கும் 20 நிமிடங்களில்... அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்த சீனா
உலகின் எந்த மூலையையும் வெறும் 20 நிமிடங்களில் தாக்கக்கூடிய நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவும் திறன் தங்களுக்கு இருப்பதாக சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
அனுமதிக்க மாட்டோம்
சீனா தாக்கப்பட்டால் பேரழிவு தரும் விளைவுகள் உறுதி என்றே சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் காவ் எச்சரித்துள்ளார்.
தங்களின் கொள்கையில் சீனா மிகவும் தெளிவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள காவ், தங்கள் தரப்பில் இருந்து எப்போது முதல் தாக்குதல் முன்னெடுக்கப்படாது என்றார். ஆனால், இரண்டாவது முறையாக சீனாவைத் தாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் வருடாந்திர வெற்றி தின அணிவகுப்பின் போது தனது இராணுவ வலிமையை அந்த நாடு வெளிப்படுத்தியது.
இந்த நிலையிலேயே சீனா தாக்கப்பட்டால், கடும் விளைவுகள் உறுதி என விக்டர் காவ் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த மாதம் நடந்த அந்த வெற்றி தின விழாவில் சீனா தனது ஆயுதங்கள் மொத்தம் காட்சிப்படுத்தியதுடன், உலகம் அமைதிக்கும் போருக்கும் இடையே ஒரு தெரிவை எதிர்கொண்டு வருவதாக ஜனாதிபதி ஜி ஜின்பிங் குறிப்பிட்டிருந்தார்.
எந்த மூலைக்கும்
குறித்த வெற்றி தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன் கலந்து கொண்டதுடன், மேற்கத்திய நாடுகளான ஸ்லோவாக்கியாவின் ராபர்ட் ஃபிகோ மற்றும் செர்பியாவின் அலெக்சாண்டர் வுசிக் ஆகியோரும் பங்கேற்றனர்.
தொடர்புடைய வெற்றி தின அணிவகுப்பு குறித்து பெருமையாக பேசிய காவ், சீனா அறிமுகப்படுத்திய ஒரு ஆயுதத்திற்கு 61 என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதில் 60 அணு ஆயுதங்கள் பொருத்தலாம் என்பதுடன் ஒரு ஹைட்ரஜன் குண்டையும் அதில் இணைக்கலாம் என்றார்.
வெறும் 20 நிமிடங்களில் உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கும் திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா எப்போதும் அமைதி விரும்பும் நாடு என்றாலும், சீனாவிற்கு எதிராக எவரும் போர் தொடுக்க முன்வர வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |