சீன வரலாற்றில்... பாடசாலை மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சக மாணவரை கொலை செய்த சிறுவனுக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கிண்டல் செய்து துன்புறுத்தி
சிறார் குற்றவாளிகள் நடத்தப்படுவது குறித்து இந்த வழக்கு தேசிய அளவில் விவாதத்தைத் தூண்டியிருந்தது. சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளும் குற்றம் நடக்கும் போது 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த மூவரும் குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்படுவதற்கு முன்னர், 13 வயதேயான சக மாணவரை நீண்ட காலமாக கிண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளதுடன், கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் கொலையும் செய்துள்ளனர்.
கொலையாளிகள் வாங் உடலை புதைப்பதற்கு முன் மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட சிறார்களை சட்டம் எவ்வாறு கையாள்கிறது என்பது தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
ஆயுள் தண்டனை விதித்து
இதில் ஜாங் என்ற சிறுவன், வேண்டுமென்றே கொலை செய்த குற்றவாளி என, வடக்கு சீனாவின் ஹெபேயில் உள்ள நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளித்தது. லி என்ற மற்றொரு சிறுவனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவருக்கு தீங்கு விளைவிக்கவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்த மா என்ற மூன்றாவது சிறுவனுக்கு திருத்தக் கல்வி விதிக்கப்பட்டது. 2021ல் தான் மிக மோசமான சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பை 14 ல் இருந்து 12 என குறித்திருந்தது.
இதனாலையே, தற்போது சக மாணவரை கொலை செய்த வழக்கில் சிறுவன் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சீன சட்டத்தின்படி, கொலைக்கு சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |