சீனாவுக்கு பெரும் சோகமாய் மாறிய 2023-ஆம் ஆண்டு., பங்குச்சந்தையில் விழுந்த பெரும் அடி
2023-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த ஆண்டு Nifty மற்றும் Sensex வரலாறு காணாத ஏற்றம் கண்டுள்ளது.
ஆனால் சீனாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. இதற்கு காரணம் என்ன தெரியுமா..
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் இந்த ஆண்டு பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உலகின் இரண்டாவது பாரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடான சீனா இதற்கு விதிவிலக்காக உள்ளது.
பொருளாதாரத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் சீனா, இந்த ஆண்டு பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
சீனாவில் ரியல் எஸ்டேட் நெருக்கடி தொடர்ந்து ஆழமடைந்து வருகிறது, மக்கள் செலவினங்களைத் தவிர்க்கிறார்கள் மற்றும் வேலையின்மை உச்சத்தில் உள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருந்த சீனா இப்போது பின்வாங்குவதற்கு இதுவே காரணம்.
சீனாவின் blue chip CSI 300 Index இந்த ஆண்டு 11 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது, அதே நேரத்தில் Hongkongன் Hang Seng 14 சதவீதம் குறைந்துள்ளது.
இதற்கிடையில், MSCI உலக குறியீடு இந்த ஆண்டு சுமார் 22 சதவீதம் அதிகரித்துள்ளது, இது 2019க்குப் பிறகு மிகப்பாரிய முன்னேற்றமாகும்.
இதேபோல், அமெரிக்காவின் முக்கிய குறியீடான S&P 500 index 25 சதவீதமும், ஐரோப்பாவின் STOXX Europe 600 சுமார் 13 சதவீதமும் அதிகரித்துள்ளது.
ஜப்பானின் Nikkei 225 இந்த ஆண்டு 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல், இந்தியாவின் முக்கிய குறியீட்டு எண் Sensex இந்த ஆண்டு சுமார் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |