எலியை பழிக்கு பழி வாங்கிய இளம்பெண்.., விரலை கடித்ததால் ஆத்திரம்
தன்னை கடித்த எலியை பழிவாங்க வேண்டும் என்று இளம்பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எலியை கடித்த இளம்பெண்
சீனாவில் 18 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரை எலி ஒன்று எதிர்பாராத விதமாக கடித்துள்ளது. அந்த மாணவியின் விரலை எலி கடித்ததாக கூறப்படுகிறது.
Representative image
இதனால், வலியால் துடித்த மாணவி எலியை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனால், தன்னை கடித்த எலியை வெறித்தனமாக கடித்துள்ளார். அதாவது அவர், எலியின் கழுத்துப்பகுதியில் கடித்து தன்னுடைய கோபத்தை தீர்த்துள்ளார். இதனால், அந்த எலி உயிரிழந்தது.
மாணவியின் உடல்நலம்
இதனைத்தொடர்ந்து, எலி கடித்ததில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு, அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த மாணவி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ.279 கொடுத்து பிரியாணி சாப்பிட்டவருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு.., ஹொட்டல் கொடுத்த இன்ப அதிர்ச்சி
மேலும், இது மாதிரியான செயல்களை யாரும் செய்ய வேண்டாம் என மாணவியின் தோழி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |