திடீரென கோடரியுடன் உணவகங்களில் நுழைந்து..வாடிக்கையாளர்கள் மீது இளைஞர் கொலை வெறித்தாக்குதல்!
நியூசிலாந்தில் உள்ள மூன்று சீன உணவகங்களில் திடீரென நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த வாடிக்கையாளர்களை கோடரியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளைஞர் கொலைவெறித் தாக்குதல்
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மூன்று சீன உணவகங்கள் அமைந்துள்ளன. நேற்று இரவு 24 வயது இளைஞர் ஒருவர் இந்த உணவகங்களுக்கு கோடரியுடன் நுழைந்துள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை கோடரியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சிலர் காயமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த பொலிஸார் தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்தனர்.
New Zealand Herald/AP pic
சீன இளைஞர்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார். கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் காயப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இந்த நிலையில், குறித்த இளைஞர் சீனாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், இது இனவெறி தூண்டப்பட்ட தாக்குதல் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இளைஞர் நடத்திய தாக்குதலால் மிகவும் கலக்கமடைந்துள்ளதாகவும், இது சமூகத்திற்கு மிகவும் கடினமாக இருந்ததை தான் அறிவதாகவும் தொழிற்கட்சி எம்.பி நைசி சென் தெரிவித்துள்ளார்.
(Hayden Woodward/New Zealand Herald via AP)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |