2000 கி.மீ. வேகம்., C949 சூப்பர்சோனிக் விமானத்தை உருவாக்க சீனா திட்டம்
மணிக்கு 2.000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய C949 சூப்பர்சோனிக் பயணிகள் விமானத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் COMAC நிறுவனம் 2049-ஆம் ஆண்டுக்கும் உலகின் பயண முறையை மாற்றும் வகையில், C949 எனும் சூப்பர்சோனிக் விமானத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இது 1976-2003 காலத்தில் இயங்கிய பிரித்தானிய-பிரெஞ்சு கூட்டு தயாரிப்பான Concorde விமானத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகும்.
C949 விமானம் 1.6 Mach (சுமார் 2000 கி.மீ.) வேகத்தில் பறக்கவல்லது. இதன்மூலம் பீஜிங்கில் இருந்து மாஸ்கோவிற்கு 3 மணி நேரத்திலும், ஷாங்காய்-லாஸ் ஏஞ்சல்ஸ் 5 மணி நேரத்தில் பறக்கலாம்.
Concorde 7,200 கி.மீ. நிற்காமல் பறக்கவல்லது. C949 விமானம் அதைவிட 50 சதவீதம் கூடுதலாக 11,000 கி.மீ. தூரம் இடைவிடாமல் பயணிக்க முடியும்.
அதேபோல், Concorde வெளியிட்ட sonic boom சத்தத்தை விட 95 சதவீதம் குறைவான (83.9 PLdB) சத்தத்தில் C949 விமானம் பறக்கும். அதாவது நாம் பயன்படுத்தும் hairdryer சத்தம் அளவிற்கு மட்டுமே கேட்கும்.
C949 விமானம், AI-Based Fly-By-Wire கட்டுப்பாடு, 42 டன் எரிபொருளை 7 டேங்க்களில் நிரப்பி மைய சுமையை சமநிலைப்படுத்தும் வகையில் Fuel System அமைப்புடன், டைட்டானியம் மற்றும் கார்பன் காம்போசிட் பொருட்களைக் கொண்டு மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்படும்.
இதுபோன்ற சூப்பர்சோனிக் விமானங்கள் எதிர்கொள்ளும் அதிக எரிபொருள் செலவு, சுற்றுசூழல் பாதிப்பு, ஒலியியல் ஒப்புதல் சிக்கல்கள் அனைத்தையும் COMAC சமாளிக்க முயற்சிக்கிறது.
இத்திட்டம் உலகளவில் சூப்பர்சோனிக் விமான துறையில் சீனாவிற் முன்னணிக்கு கொண்டு செல்லும் என COMAC நம்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China C949 Supersonic Jet, Supersonic Passenger jet, fastest aircraft, fastest flight, COMAC aircraft, Concorde vs C949, Supersonic speed