புதிய K Visaவை அறிமுகப்படுத்தும் சீனா - இளம் திறமைசாலிகளை ஈர்க்கும் திட்டம்
சீனா வரும் அக்டொபேர் 1 முதல் புதிய K வகை விசாவை (K Visa) அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த புதிய விசா இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளைக் கொண்ட வெளிநாட்டு நபர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது உள்ள 12 வகை விசாக்களுடன் ஒப்பிடுகையில், இந்த K விசா பல நன்மைகளை வழங்குகிறது.
அவை,
- அதிகமான நுழைவு அனுமதிகள்
- நீண்ட காலம் செல்லுபடியாகும்
- அதிக காலம் சினிமாவில் தங்க அனுமதி
K விசாவின் முக்கிய அம்சங்கள்:
- சீன நிறுவனத்திலிருந்து அழிப்பு கடிதம் தேவையில்லை
- வயது, கல்வித் தகுதி, வேலை அனுபவம் போன்ற சில அடிப்படைத் தகுதிகள் மட்டுமே
- எளிமைப்படுத்தப்பட்ட விண்ணப்ப செயல்முறை
K விசா பெற்றவர்கள் சீனாவில் கல்வி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பரிமாற்றங்களில் ஈடுபடலாம். மேலும், தொழில் தொடக்கம் மற்றும் வணிக நடவடிக்கைகளிலும் பங்கேற்கலாம்.
உலகம் முழுவதிலும் இருந்து திறமைசாலிகளை ஈர்க்கும் நோக்கில், சீனா விசா விதிகளை தளர்த்தி வருகிறது. இதன் பலனாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 38.05 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் சீனாவிற்கு வந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China K visa 2025, China new visa for tech professionals, K visa eligibility China, China immigration policy update, China visa October 2025, China visa for young scientists, China tech visa no job offer, China global talent visa, China visa for researchers, China visa for engineers, China visa for innovators