சீனாவின் புதிய Kimi AI- இந்தியாவிற்கு புதிய சவால்
சீனாவின் Moonshot நிறுவனம் உருவாக்கிய Kimi K3 (Kimi 3.0) என்ற புதிய AI மாடல், உலக AI போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை அமெரிக்காவின் Anthropic Mythos AI முன்னிலை வகித்த நிலையில், Kimi K3 அறிமுகமானதால் சீனாவும் அதே அளவிலான திறனை பெற்றுள்ளது.

இந்த AI, 3 டிரில்லியன் பராமீட்டர்கள் கொண்ட மிகப்பெரிய மாடல் ஆகும். இது நிதி சந்தைகள், இராணுவ திட்டமிடல், சைபர் பாதுகாப்பு, உற்பத்தி, தானியங்கி ஆயுதங்கள் போன்ற துறைகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில், முன்னணி AI மாடல்களை கட்டுப்படுத்தும் விதமாக புதிய சட்டங்கள், தரவு மையங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சீனாவின் Kimi K3, Frontend Code Arena-வில் முதலிடம் பிடித்ததால், உலக AI போட்டியில் சீனா முன்னேறியுள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவிற்கு, Kimi K3 ஒரு புதிய சவாலாக உள்ளது. AI தற்போது அணு ஆயுதம் அல்லது 5th-generation fighter jet போலவே ஒரு முக்கியமான மூலோபாய ஆயுதமாக கருதப்படுகிறது. இந்தியா, தனது சொந்த AI மாடல்களை உருவாக்காமல் இருந்தால், எதிர்காலத்தில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சார்ந்திருக்கும் அபாயம் உள்ளது.
இந்தியாவில், பெரிய அளவிலான AI மாடல்களை உருவாக்க தேவையான நிதி, கணினி சக்தி, திறமையான ஆராய்ச்சியாளர்கள் குறைவாக உள்ளன.
இருப்பினும், விண்வெளி மற்றும் அணு ஆயுத திட்டங்களில் இந்தியா கடந்த காலத்தில் சவால்களை வெற்றிகரமாக சமாளித்தது போல, AI துறையிலும் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |