உக்ரைன் போருக்கு காரணம் இந்த நாடு தான்... பெரும்பாலான சீன மக்கள் ஒரே கருத்து
உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தான் காரணம் என்று 80 சதவீத சீன மக்கள் கருதுவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும்
குறித்த போருக்கு முதன்மை காரணம் ரஷ்யா தான் என 10 சதவீதத்திற்கும் குறைவான மக்களே கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவின் Tsinghua பல்கலைக்கழகம் சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தான் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
@potus
80.1 சதவீதம் மக்கள், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தான் உக்ரைன் போருக்கு முதன்மையான காரணம் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், உக்ரைன் போருக்கு உக்ரைன் நாடு தான் காரணம் என 11.7 சதவீதம் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இருப்பினும், 8.2 சதவீதம் மக்கள் ரஷ்யாவின் அத்துமீறலை கண்டித்துள்ளனர். போரினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது கவனத்தில் கொள்ள வேண்டும் என 34.1 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 59.1 சதவீதம் மக்கள் அமெரிக்காவை நம்ப முடியாது எனவும் விரும்பத்தக்க நாடு அல்ல எனவும் பதிலளித்துள்ளனர். ஆனால் ரஷ்யா தொடர்பில் 7.8 சதவீத சீன மக்களே வெறுப்பை பதிவு செய்துள்ளனர்.
பகைமைக்கு முக்கிய காரணம்
உக்ரைன் போர் தொடர்பில் சீனா நடுநிலையான முடிவையே இதுவரை முன்னெடுத்துள்ளது. மட்டுமின்றி, ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்க அமெரிக்கா அழைப்பு விடுத்த போது சீனா அதை ஏற்க மறுத்தது.
@AP
மேலும், சீன வெளிவிவகார அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில், நேட்டோ அமைப்பின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் என்பது பகைமைக்கு முக்கிய காரணம் என அடையாளம் கண்டுள்ளது.
அதேசமயம், மோதலுக்கு இராஜதந்திர தீர்வைக் கோராமல், உக்ரேனுக்குள் ஆயுதங்களைத் தொடர்ந்து குவிப்பதற்காக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை சீன அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.