புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5லட்சம் ஊக்கத்தொகை: சீன நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் இளம் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் ஊக்கத் தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு குடும்பம் 3 குழந்தைகள் திட்டம்
சீனாவில் முதியோர்கள் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் அதை சமன் செய்யும் நோக்கில் சீன அரசாங்கம் ஒரு குடும்பம் 3 குழந்தைகள் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு சீன குடும்பமும் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
மேலும் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கில் சீன அரசும், சீன அரசின் பரிந்துரையின் படி, நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
பிறக்கும் குழந்தைக்கு ஊக்கத்தொகை
இந்நிலையில் ஷாங்காய் நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் டிரிப் டாட் காம் குரூப் லிமிடெட் என்ற நிறுவனம் தங்கள் ஊழியர்கள் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஊக்கத் தொகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் செயல் தலைவர் ஜேம்ஸ் லியாங் தெரிவித்த தகவலில், எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களும் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டு ஒன்றுக்கு 1.13 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஊக்கத் தொகையானது 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும், இதன் மூலம் ஒரு குழந்தைக்கு 5 ஆண்டுகள் என்ற விதத்தில் சுமார் 5.65 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் எங்கள் நிறுவனத்தின் ஒரு ஊழியர் எத்தனை குழந்தைகள் வேண்டும் என்றாலும் பெற்றுக் கொள்ளலாம், அத்தனை குழந்தைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஜேம்ஸ் லியாங் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |