சீனா வெளியிட்ட chatbot... அமெரிக்க பங்குச் சந்தையில் 1 டிரில்லியன் டொலர் இழப்பு
திங்களன்று சீன நிறுவனம் ஒன்று DeepSeek என்ற தொழில்நுட்பத்தை வெளியிட்டதை அடுத்து அமெரிக்க பங்குச்சந்தையில் 1 டிரில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்டம் காண வைத்துள்ளது
சீன நிறுவனத்தின் DeepSeek என்ற chatbot தொழில்நுட்பம் வெளியிட்டதன் பின்னர் திங்களன்று முதலீட்டாளர்கள் உலகளாவிய தொழில்நுட்ப பங்குகளை கைவிட்டதாகவே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, அமெரிக்காவின் இதுவரையான AI தொழில்நுட்ப வளர்ச்சியை ஒரே நாளில் மொத்தமாக ஆட்டம் காண வைத்துள்ளது DeepSeek என்ற chatbot தொழில்நுட்பம்.
இந்த நிலையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் உச்சமான Nasdaq Composite 3.1 சதவிகித சரிவை பதிவு செய்தது. இதனால் ஒட்டுமொத்தமாக 1 டிரில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கணினி சில்லுகளின் முன்னணி தயாரிப்பாளரான Nvidia பங்குகள் 17 சதவிகிதம் சரிவடைந்து அதன் சந்தை மதிப்பில் 600 பில்லியன் டொலர் தொகையை இழந்துள்ளது.
ஒரு எச்சரிக்கை மணி
கூகிள் குடும்பத்தின் Alphabet நிறுவனம் 100 பில்லியன் டொலர் தொகையை இழந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 7 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்டுள்ளது.
இதில் Nvidia பங்குகளின் வீழ்ச்சி அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரியது என்றே கருதப்படுகிறது. இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவிக்கையில், நமது தொழில்கள் வெற்றி பெற போட்டியிடுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு எச்சரிக்கை மணியாக DeepSeek அமைந்துள்ளது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |