39 பேருடன் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடி கப்பல்: இதுவரை 2 சடலங்கள் மீட்பு
இந்திய பெருங்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடி கப்பலை தேடும் நடவடிக்கையின் போது இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
2 சடலங்கள் மீட்பு
இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலில் காணாமல் போன 39 பணியாளர்களை தேடும் நடவடிக்கையின் போது இன்று (வியாழக்கிழமை) இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதாக பெய்ஜிங்கின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை அதிகாலை 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் பிரஜைகளை ஏற்றிச் சென்ற Lu Peng Yuan Yu 028 எனும் சீன மீன்பிடிக் கப்பல், மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநிலத் தலைநகரான பெர்த்திற்கு மேற்கே 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) தொலைவில் கவிழ்ந்தது.
republicworld
வியாழன் அன்று கண்டெடுக்கப்பட்ட இரு சடலங்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
தொடரும் மீட்புப்பணி
லு பெங் யுவான் யூ 028 என்ற மீன்பிடிக் கப்பலின் பேரிடர் அழைப்பின் பேரில், தென் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுமார் 900 நாட்டிகல் மைல்கள் தொலைவில் இந்தியாவில் இருந்து தேடுதல் மற்றும் மீட்பு (SAR) முயற்சிகளுக்காக மே 17 அன்று P-8I கடல் ரோந்து விமானத்தை அனுப்பியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
P-8I maritime patrol aircraft. representative image: Special Arrangement
அவுஸ்திரேலியாவிலிருந்து 5,000 கிமீ தொலைவிலும், இலங்கைக்கு தெற்கே 1,300 கிமீ தொலைவிலும் உள்ள கடல் பகுதியில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் (AMSA), இந்தியப் பெருங்கடலில் ஒரு பெரிய பகுதியைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையும் தேடுதலுக்கு P-8A விமானத்தை அனுப்பியுள்ளது.
AMSA aircraft Credit: Supplied
சீன அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வியாழன் பிற்பகல் 2 மணி நிலவரப்படி, மூன்று சீன கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஒரு வெளிநாட்டுக் கப்பல் உட்பட 10 கப்பல்கள் தேடுதல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன, மேலும் மேலும் கப்பல்கள் வரவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.