கறுப்பாகிவிடுவோம் என பயந்து சூரிய ஒளியை தவிர்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
வெயில் காலங்களில் வெளியே செல்லும் பலரும், தோல்களை பாதுகாக்க முகம் மற்றும் கைகளில் சன் லோஷன் பூசிக்கொள்வார்கள்.
சிலர் தோல் தெரியாதவாறு ஆடை அணிவது, முகத்திற்கு மாஸ்க் அணிவது மூலம் வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்வார்கள்.
சூரிய ஒளியை தவிர்த்த பெண்
அதேபோல், சீனாவை சேர்ந்த 45 வயதான பெண், சிறு வயது முதலே வெயில் பட்டால், தோலின் நிறம் கருமையடைந்து விடும் என அஞ்சி வெயிலில் செல்வதை தவிர்த்துள்ளார்.
அவ்வாறு வெயிலில் சென்றாலும், உடல் முழுவதும் மறைவதும் போல் ஆடை அணிந்து தான் சென்றுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் சாதாரணமாக படுக்கையில் திரும்பி படுக்கும் போது எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், போதுமான வைட்டமின் டி இல்லாமல், எலும்புகள் பலவீனமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி, எலும்புகளின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். தோல் கருமையாக்க விடும் என்ற அச்சத்தில் சூரிய ஒளியை தவிர்த்தால், அவரின் எலும்புகள் பலவீனமடைந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சூரிய ஒளியை நீண்ட காலம் தவிர்ப்பதன் மூலம் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, எலும்புகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |