90 கிலோ எடை இழக்க உடற்பயிற்சி., 21 வயது இளம்பெண் மரணம்
உடல் எடையை குறைக்க அதிக உடற்பயிற்சி செய்த 21 வயது இளம்பெண் உயிரிழந்தார்.
சீனாவைச் சேர்ந்த குய்ஹுவா (Cuihua) என்ற 21 வயதுடைய பெண் உடல் எடையை குறைக்க அதிக உடற்பயிற்சி செய்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சீனாவின் சாந்தி மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் சமூக ஊடக தளமான Douin-ல் 10,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலமானார்.
Cuihua/Douin
அவரது உடல் எடை 90 கிலோவாக இருந்தது. இதை குறைக்க அதிக உடற்பயிற்சி செய்துவந்துளார். அவர் Douin கணக்கிலும் தன்னைப் போலவே உடல் பருமனைக் குறைக்க போராடும் தனது பின்தொடர்பாளர்களை ஊக்குவிப்பார். அதற்காக குய்ஹுவா எடை குறைக்கும் முகாமில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், குய்ஹுவாவின் டூயின் பக்கத்தில் அவரது மரணத்தை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இது அவரது பின்தொடர்பாளர்களிடன் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது டூயின் பக்கத்தில் வெளியான சமீபத்திய வீடியோக்கள் அவர் தீவிர கார்டியோ செய்வதையும், எடை தூக்குவதையும், அதிகமாக உடற்பயிற்சி செய்வதையும் காட்டுகிறது.
Cuihua/Douin
பழங்கள், காய்கறிகள், முட்டை, முட்டைக்கோஸ் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய கடுமையான உணவு முறையையும் அவர் பின்பற்றிவந்துள்ளார். இதையடுத்து 40 கிலோ எடையை குறைத்துள்ளனர்.
ஆனால் பல காணொளிகளின் போது அவர்கள் மனமுடைந்து போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.