என்னைவிட 10 வயது குறைவான பெண் வேண்டும்! ஒரு கோடி ஊதியம்பெறும் பேராசிரியர்..கோரிக்கைகளால் சர்ச்சை
சீனாவில் பேராசிரியர் ஒருவர் தனது காதலி எப்படி இருக்க வேண்டும் அறிவித்த நிபந்தனைகளால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார்.
1 மில்லியன் யுவான் ஊதியம்
கிழக்கு சீனாவில் உள்ள Zhejiang பல்கலைக்கழக்கத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் Lou (35).
இணை பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், ஆண்டுக்கு ரூ.1.17 கோடிக்கும் மேல் (1 மில்லியன் யுவான்) ஊதியம் பெறுகிறார்.
காதலியை தேடி வரும் இவர், அதற்காக வைத்திருக்கும் நிபந்தனைகள்தான் பல விவாதங்களைத் தூண்டியுள்ளது.
அதாவது, Lou தனது பதிவு ஒன்றில் தன்னைப் பற்றிய விவரங்களை கூறியுள்ளார். மேலும், தனது காதலி தன்னை விட 10 வயது இளையவராக இருப்பார் என்று எதிர்பார்க்கும் இவர், 165 முதல் 171 வரை அவரது உயரம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் 'உடல் மெலிதானவராகவும், நல்ல நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.
சிறப்பு நிலைமை
மேலும், அவர் தனது பதிவில் கூறுகையில், "உலகளவில் முதல் 20 இடங்களில் தரவரிசைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்துபட்டம் பெறுபவர்களையும், அவர்களின் சொந்த சிறப்பு நிலைமைகளைப் பொறுத்து நான் கருத்தில் கொள்வேன். சட்டம் அல்லது மருத்துவத்தில் பாரிய பட்டம் பெற்றவர்களும் இருக்கலாம்.
அப்பெண் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் மேற்கண்ட பட்டியலில் இல்லை, ஆனால் தோற்றம், குடும்பத்தின் நிதி நிலைமை அல்லது அவரது திறன்கள் போன்ற பிற அம்சங்களில், அவர் அசாதாரணமானவராக இருந்தால், அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நான் தலையிடலாம்" என்றார்.
இதற்கு கடுமையான எதிர்வினை கிளம்பியது. அவரது பல்கலைக்கழகம் "இவற்றில் சில தகவல்கள் உண்மைக்கு மாறானதாக உள்ளன" என தெளிவுபடுத்தாமல் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |