108 கொழுக்கட்டைகளை சாப்பிடும் போட்டி: சிக்கலில் மாட்டிக்கொண்ட சீன உணவகம்
சீனாவில் 108 கொழுக்கட்டைகளை சாப்பிடும் போட்டி வைத்த உணவகம் ஒன்று பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளது.
108 கொழுக்கட்டைகளை சாப்பிடும் போட்டி
சீனாவில் உள்ள ஒரு உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு 108 கொழுக்கட்டைகளை (dumplings) சாப்பிடும் போட்டியை நடத்தியுள்ளது.
அவ்வாறு 108 கொழுக்கட்டைகளை விரைவில் சாப்பிட்டு முடிக்கும் வெற்றியாளர் சாப்பிட்டதற்கு பில் கட்ட தேவையில்லை, அதோடு இலவச உணவையும் வேறு சில பரிசுகளையும் வெல்வதற்கான வாய்ப்பை அளிக்கும் விதமாக அந்த உணவகம் போட்டியை அறிவித்துள்ளது.
உணவு வீணடிப்பு சட்டம் மீறப்பட்டதா?
இந்த போட்டிக்கான விளம்பரங்களை உணவகம் சமூக ஊடகங்களில் பதிவிட்ட நிலையில், அது ஏராளமான வாடிக்கையிலர்களை கவர்ந்திழுத்தது. அதே நேரம் சீனாவின் அதிகாரிகளின் கவனத்தையும் அது ஈர்த்துள்ளது.
இப்போது, அந்த உணவகம் சீனாவின் உணவு வீணடிப்பு சட்டத்தை (food-waste laws) மீறியதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சீனர்களின் நினைவில் நிற்கும் உணவு பஞ்சம்
உண்ணும் போட்டிகள் (Mukbang) மற்ற நாடுகளில் பொதுவானதாக இருக்கலாம், ஆனால் சீனாவில் அவை மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய விடயமாகும்.
1950 மற்றும் 1960-களில் 45 மில்லியன் மக்களைக் கொன்ற பஞ்சத்தின் நினைவுகள் நாட்டில் பலருக்கு இன்னும் உள்ளன.
உணவகத்திற்கு 43,00,000 லட்சம் அபராதம்
இந்தச் செய்தியை வெளியிட்ட அரச செய்தி நிறுவனமான தி கவர், உணவகத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் இதே போன்ற போட்டிகளுக்காக பலர் பரிசோதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
பார்வையாளர்களைக் கவரும் வகையில், லைவ்-ஸ்ட்ரீம் செய்யும் பிளாக்கர்கள் மீதான அரசாங்கத்தின் கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்து, 2021-ல் உணவு வீணடிப்பு எதிர்ப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. இதன் விளைவாக, அவர்களின் பல கணக்குகள் பின்னர் சமூக ஊடக தளங்களால் முடக்கப்பட்டன.
இந்த சட்டத்தின் கீழ், உணவக உரிமையாளர்கள் 100,000 யுவான் (இலங்கை பணமதிப்பில் ரூபா.43 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Chinese restaurant, eating challenge, China, food waste laws, 108 dumplings Challenge, Mukbang, Food Challenge