போர் விமானங்களை கொத்தாக அனுப்பி தைவானை மீண்டும் சீண்டிய சீனா
தைவான் எல்லை அருகாமையில் சீனா பயிற்சி முன்னெடுத்துள்ள நிலையில், சனிக்கிழமை மட்டும் 40கும் மேற்பட்ட போர் விமானங்கள் எல்லையை மீறியதாக தைவான் கொந்தளித்துள்ளது.
தேர்தலில் ஆதிக்கத்தை செலுத்தவே
தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கையில், தைவான் ஜலசந்தியை சீனாவின் 26 விமானங்கள் கடந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். தைவானில் முன்னெடுக்கப்பட இருக்கும் தேர்தலில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தவே சீனா முயன்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
@reuters
ஆனால், சீனா தரப்பில், போர் சூழலில் படைகளின் திறன் குறித்து சோதனை மேற்கொள்ளவே இந்த பயிற்சி என குறிப்பிட்டுள்ளனர். சனிக்கிழமை தைவான் எல்லையில் கடற்படை மற்றும் விமானப்படையின் ரோந்து மற்றும் பயிற்சிகளை சீனா முன்னெடுத்தது.
மேலும், கடும் எதிர்ப்பையும் மீறி தைவானின் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் அமெரிக்கா சென்றதும் சீனாவை கோபம் கொள்ள வைத்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்ததையடுத்து, சீனா இதுபோன்று பெரிய ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது.
பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக
திரும்பவும், கலிபோர்னியாவில் தைவான் ஜனாதிபதி தற்போதைய சபாநாயகரை சந்தித்த பின்னரும் சீனா தனது கோபத்தை வெளிப்படுத்தியது. ஜனவரியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வில்லியம் லாய் முதன்மை வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.
@reuters
ஆனால் சீனா தெரிவிக்கையில், வில்லியம் லாய் எப்போதும் பிரச்சனையை கிளப்புபவர். அவரது தலைமையில் நாட்டின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறும் என குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |