பல் மருத்துவரை காண சென்ற சிறுமி... கடுமையான இரத்தக்கசிவால் மரணமடைந்த துயரம்
கொலம்பியாவில் உடைந்த பல்லை அகற்ற சென்ற 8 வயது சிறுமி, கடுமையான இரத்தக்கசிவால் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் மொத்த குடும்பத்தினரையும் உலுக்கியுள்ளது.
பல் வலியால் கடுமையாக அவதி
கொலம்பியாவின் தோலிமா பகுதியிலேயே தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. தாயார் Azucena Triana தெரிவிக்கையில், இரட்டையர்களில் ஒருவரான தமது மகள் Salomé Bohórquez பல் வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.
@facebook
இதனையடுத்து தோலிமா பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரை நாடியதாக தெரிவித்துள்ளார். அந்த மருத்துவர் எக்ஸ்ரே எடுத்துவர கோரியுள்ளார். அதில் சிறுமியின் கடைவாய் பல் உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த உடைந்த பல்லை அகற்ற முடிவு செய்யப்பட்டு, மருத்துவரும் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில், அந்த மருத்துவர் சிறுமியின் பல்லை அகற்றியுள்ளார். ஆனால் அதன் பின்னர் சிறுமிக்கு கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு தெரியவில்லை
இதனையடுத்து, இன்னொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த மருத்துவரே அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், இரண்டாவது மருத்துவமனையில் வைத்து சிறுமி, ரத்தக்கசிவு காரணமாக பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
Credit: Noticias
தாயார் குறிப்பிடுகையில், ரத்தக்கசிவை கட்டுப்படுத்த அங்குள்ள மருத்துவர்களுக்கு தெரியவில்லை எனவும், அதுவே தமது மகளின் இறப்புக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமி முன்னர் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ச்சியான சிகிச்சையைத் தொடர்ந்து குணமடைந்துள்ளார் எனவும் தாயார் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |