ஆப்பிரிக்க நாடொன்றை மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்... 400 கடந்த இறப்பு எண்ணிக்கை
ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா பெரும் காலரா பாதிப்பால் தத்தளித்து வரும் நிலையில், இதுவரையில் 400 க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
10,000 க்கும் மேற்பட்டவர்கள்
குறித்த பாதிப்பால் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலரா பாதிப்பால் நாடு முழுவதும் பாடசாலைகள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
Photo: Zambia Red Cross Society
இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கால்பந்து மைதானமொன்று மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஜாம்பியா அரசாங்கமானது தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி சேவையை முன்னெடுத்து வருகிறது.
அத்துடன் நாளுக்கு 2.4 மில்லியன் சுத்தமான குடிநீரும் விநியோகிக்க உள்ளது. காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு பாதிப்பாகும், இது பொதுவாக அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவுகிறது.
ஜாம்பியாவில் காலரா பாதிப்பானது அக்டோபரில் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 412 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 10,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற தென்னாப்பிரிக்க நாடுகளிலும்
நாட்டின் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களிலும், 10 மாகாணங்களில் ஒன்பது மாகாணங்களிலும் காலரா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
@HHICHILEMA
சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் ஒரு நாளைக்கு 400 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது. மேலும், மலாவி, மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட பிற தென்னாப்பிரிக்க நாடுகளிலும் சமீபத்தில் காலரா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தென்னாப்பிரிக்காவில் 200,000 க்கும் மேற்பட்டவர்கள் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |