மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் தப்பிய பெண்: எப்படி இருக்கிறார்?
Christa Pike remains unconscious on a ventilator, lawyers say: மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் தப்பிய கிறிஸ்டினா பைக் என்னும் பெண், சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவில், ஊசி மூலம் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சியில் அவர் உயிரிழக்காததால், பெரும் பரபரப்பு உருவானது
மரண தண்டனை நிறைவேற்றும்போது...
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்திலுள்ள Nashville என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறையில், கிறிஸ்டா பைக் (Christa Pike, 50) என்னும் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

கிறிஸ்டா பைக், தனக்கு 18 வயதே இருக்கும்போது, தனது காதலனான டாடரில் ஷிப் (Tadaryl Shipp, 17) என்னும் இளைஞருடன் சேர்ந்து, கொலீன் ஸ்லெம்மர் (Colleen Slemmer) என்னும் 19 வயது இளம்பெண்ணை, சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்தார். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு கொலீன் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
கொலீன் தன் காதலரை தன்னிடமிருந்து திருடிக்கொள்ள முயன்றதால் அவரைக் கொலை செய்ததாக தெரிவித்திருந்தார் கிறிஸ்டா.
இந்நிலையில், புதன்கிழமையன்று, சாட்சியங்கள் சூழ்ந்திருக்க, கிறிஸ்டாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக, அவரது உடலில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
ஆனால், இரண்டு முறை ஊசி மூலம் மருந்தைச் செலுத்தியும் அவர் உயிரிழக்கவில்லை. மாறாக, அவரிடமிருந்து குறட்டை சத்தம் கேட்பதை கவனித்த மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துள்ளார்கள்.
அப்போது, அவருக்கு இதயத்துடிப்பு இருப்பது தெரியவரவே, உடனடியாக கிறிஸ்டா மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எப்படி இருக்கிறார்?
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிறிஸ்டா, 24 மணி நேரத்துக்கும் மேலாக சுயநினைவற்ற நிலையில் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.

அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக அவரது உடலில் ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டதால் சுயமாக சுவாசிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கிறிஸ்டா, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளாராம்.
அத்துடன், உயிருக்குப் போராடிவரும் கிறிஸ்டாவைக் காப்பாற்ற மருத்துவமனை ஊழியர்கள் போராடிவருவதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
அவரது கையில் ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்ட இடம் தீக்காயம் பட்டது போல் காணப்படுவதாகவும், அந்த இடத்தில் கொப்புளம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது கை வீங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், ஊசி மூலம் அந்த மருந்து ஏற்றப்பட்டதன் பக்க விளைவுகளை கிறிஸ்டா நீண்ட காலம் அனுபவிக்கவேண்டி வரலாம் என அவருக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.