கிறிஸ்துமஸ் நாளில் கொத்தாக புதைந்து மரணித்த மக்கள்: வெளிவரும் திகில் சம்பவம்
ஆஸ்திரியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பனிச்சறுக்கு ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 10 பேர் பனியில் புதையுண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கர பனிச்சரிவு
ஆஸ்திரியாவின் லே மற்றும் ஜீயஸ் மலை கிராமங்களில் இந்த பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. 100 பேர்கள் கொண்ட குழு தற்போது தேடும் பணியில் தீவிரமாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
@AFP
மேலும், தலையில் அணிந்துகொள்ளும் விளக்குகளுக்கு கோரியுள்ளனர். இதனால் தொடர்ந்து தேட உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் எனவும் லே நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
10 பேர் மொத்தமாக
உள்ளூர் நேரப்படி சுமார் 3 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக மீட்கபட்டுள்ளார். 10 பேர் மொத்தமாக புதைந்து போயுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்திற்கு பின்னர் பனிச்சறுக்கு ரிசார்ட்டானது மூடப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
@getty
மலையேறும் பயிற்சிபெற்ற ஒருவர், மலை உச்சிக்கு சென்று புகைப்படம் ஒன்றை பதிவு செய்து குடும்பத்தினருக்கு பகிர்ந்துகொண்ட சில நிமிடங்களில் பனிச்சரிவு காரணமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், தற்போது 10 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமான அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.