ரஃபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் - ஐ.நா சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
தெற்கு காசாவில் அமைந்துள்ள ரஃபா நகரம் மீது இஸ்ரேல் நடத்து தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் - காசா போர்
இஸ்ரேல் - காசா இடையேயான மோதல் பல மாதங்களாக தொடரும் நிலையில் தற்போது அங்குள்ள நிலைமை எல்லை மீறி சென்றுக்கொண்டிருக்கிறது.
தெற்கு காசாவில் அமைந்துள்ள முக்கிய நகரான ரஃபாவில் உள்ளே நுழைந்து தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகின்றது.
ரஃபா அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் என்பதால் இங்கு பல்லாயிர மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
ஏற்கனவே 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காசாவில் உயிரிழந்துள்ளனர். இன்னும் தாக்குதல் நடத்தி வந்தால் உயிர் இழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு தாக்குதலை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
ஐ.நா. நீதிமன்றத்தின் உத்தரவு
15 நீதிபதிகளைக் கொண்ட குழு, இறப்பு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், காசாவில் மனிதாபிமான துன்பத்தைத் தணிக்கவும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை இஸ்ரேல் பின்பற்றவில்லை என்றால், உலக நாடுகளால் தனித்து விடப்படும் அபாயம் ஏற்படும்.
காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். அதாவது போர் நிறுத்தம் குறித்து நீதிமன்றம் வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |