செயற்கைக் கால்கள் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்!
பிரித்தானியாவின் முன்னாள் ராணுவ வீரரான ஹரி புத்தமகர் என்பவர் தனது இரண்டு கால்களை இழந்த நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.
ஹரி புத்தமகர்
43 வயதான ஹரி புத்தமகர், வெள்ளிக்கிழமை 8848.86 மீட்டர் உச்சத்தைக்கொண்ட மலையுச்சியை எட்டியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்திற்காக பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாகப் போரிட்டபோது ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.
அவருடைய பயணம்,
2017 ஆம் ஆண்டில் எவரெஸ்டில்பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்களை மலையேறுதற்காக தடைசெய்துள்ளனர்.
ஆகவே 2018 ஆம் ஆண்டு வரை எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை அவர் ஒத்திவைத்தார்.
BREAKING NEWS – Hari Budha Magar creates history as he successfully conquers Everest
— Hari Budha Magar (@Hari_BudhaMagar) May 20, 2023
At around 3pm on May 19th, Hari stood victorious atop the world’s tallest mountain as the first ever double above-knee amputee to scale Mt Everest.
Thirteen years after losing his legs in… pic.twitter.com/a24j5ZYkvo
பின்னர் தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது.
ஆகவே இவர் தனது சாதனை பயணத்தை தொடர்ந்துள்ளார்.
இரட்டை கால்களை இழந்த நிலையில் முதல் நபராக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.