உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகள் வழங்கி உதவிய அமெரிக்கா: நட்பு நாடுகள் கண்டனம்
உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்க அமெரிக்காவுக்கு அதன் நட்பு நாடுகளான கனடா, ஸ்பெயின் போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 500 நாட்களை தொட்டு நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனிடம் வெடிமருந்து தீர்ந்து கொண்டே வருகிறது.
இதையடுத்து அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வழங்க கோரி உக்ரைன் உதவி கோரியது. இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகள் வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.
AFP
ஆனால் அமெரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்க பிரித்தானியா, கனடா, ஸ்பெயின் ஆகிய அமெரிக்காவின் நட்பு நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கிளஸ்டர் குண்டுகள் 120க்கும் மேற்பட்ட நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளஸ்டர் குண்டுகள்
கிளஸ்டர் குண்டுகள் என்பது வெடிக்கும் போது காற்றில் பல குண்டுகளை பல இடங்களுக்கு தூக்கி வீசும்.
இவ்வாறு தூக்கி வீசப்பட்ட குண்டுகள் சில சமயம் வெடிக்காமல் இருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வெடித்து பாதிப்புகளை பலமாக ஏற்படுத்தும்.
இதற்கிடையில் குடியிருப்பு பகுதியில் இந்த கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்த மாட்டோம் என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |