தமிழ் மக்களுக்கு மொழி உணர்ச்சி என்பது இரத்தத்தில் உள்ளது! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு
தமிழ் மக்களுக்கு மொழி உணர்வு என்பது எழுத்துகளாக இல்லாமல் அவர்களது இரத்தமாக உள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொன்மை தமிழரின் பெருமை என்ற தலைப்பில் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை சார்பில் பிரம்மாண்டமான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு சிறப்பான உரையை ஆற்றினார்.
PTI photo
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு
அதில், சிந்து சமவெளி நாகரிக மக்கள் பேசிய மொழி தமிழ் தான், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என குறிப்பிட்டு பேசினார்.
அத்துடன் தமிழர்களுக்கு மொழி உணர்வு என்பது எழுத்துகளாக இல்லாமல், அவர்களது உடலில் ஓடும் இரத்தம் போன்றது.
இந்தியாவிலேயே அதிக கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும், இனி இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்து எழுதப்பட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |