வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்தவர் வயிற்றுக்குள் இருந்த பல கோடி மதிப்பிலான பொருள்! புகைப்படம்
வெளிநாட்டு பயணியின் வயிற்றுக்குள் இருந்த பல கோடி மதிப்புள்ள பொருட்கள்.
கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு பல கோடிகள்.
வெளிநாட்டை சேர்ந்த பயணி, வயிற்றுக்குள் பல கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு விமானம் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கடந்த மாதம் 28-ந் திகதி வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் மேற்கு ஆப்பிரிக்கா நாடான கானாவை சேர்ந்த பயணியின் உடைமைகளில் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்காததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தனிஅறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். இதில் போதைப்பொருள் கேப்சூல்களை விழுங்கி இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
mumbai customs
இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் 3 நாட்களாக சிகிச்சை அளித்து வயிற்றுக்குள் இருந்த 87 கேப்சூல்கள் வெளியே எடுத்தனர்.
அதில் சுமார் 1 கிலோ 300 கிராம் எடையுள்ள கொகைன் இருந்தது. இவற்றின் சர்வதேச சந்தையில் மதிப்பு ரூ.13 கோடி ஆகும். இது குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.