கடும் குளிரால் மொத்தமாக அவதிக்குள்ளான ஆசிய நாடொன்று... மூடப்பட்ட பிரதான சாலைகள்
சீனாவில் குளிர் அலை வீசுவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உறையவைக்கும் அளவுக்கு வெப்பநிலை சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைனஸ் 40 டிகிரி செல்சியஸ்
பனி படர்ந்த பகுதிகளில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து, பல மாகாணங்களில் பிரதான சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
@reuters
வடகிழக்கு மாகாணமான ஹீலாங்ஜியாங்கின் சில பகுதிகளிலும் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங் பகுதியிலும் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸுக்கு கீழே குறையும் என்று சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹெய்லாங்ஜியாங்கில் உள்ள யிச்சுன் நகரம், கடுமையான குளிரை எதிகொள்ள இருப்பதாகவும், 1980 ஜனவரியில் பதிவான மைனஸ் 47.9 C சாதனை அடுத்த வார தொடக்கத்தில் முறியடிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஷாங்காயில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் படகுகள் மற்றும் சில பேருந்துகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. வார இறுதியில் வெப்பநிலை மைனஸ் 6 C என இருக்கும் என்றே கூறப்படுகிறது.
பனிப்புயல் எச்சரிக்கை
இதனிடையே, உள்ளூர் அரசாங்கம் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 2,400 பணியாளர்களையும், 3,300 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான பனி உருக வைக்கும் ரசாயனங்களையும் மற்றும் 23,000 கன மீற்றருக்கும் அதிகமான சறுக்கல் எதிர்ப்பு பொருட்களையும் பயன்பாட்டிற்கு தயாராக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
பெய்ஜிங் மற்றும் ஜியாங்சி மற்றும் ஷாங்க்சி மாகாணங்களும் காய்கறி மற்றும் பழ அறுவடைகளை பனிப்பொழிவு சேதம் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
முன்னதாக வெள்ளிக்கிழமை பனிப்புயல் எச்சரிக்கையை நீக்கிய சீனா, வடகிழக்கில் உள்ள லியோனிங் மற்றும் ஜிலின் மாகாணங்கள் மற்றும் ஷான்டாங்கில் கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |