நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும்: ஜனாதிபதி ஒருவர் வெளிப்படை
காஸா போர் தொடர்பில், உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடி உள்ளிட்டவைகளுக்கு காரணமான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும் என தென் அமெரிக்க நாடு ஒன்றின் ஜனாதிபதி வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
யூத விரோத ஆதரவாளர்
குறித்த கருத்துக்கு காட்டமாக பதிலளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ போன்ற ஹமாஸின் யூத விரோத ஆதரவாளர் எவரும் இஸ்ரேலுக்கு பாடம் சொல்ல தேவையில்லை என பதிலளித்துள்ளார்.
காஸா போர் தொடர்பில் நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும் என்று கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி இஸ்ரேல் ஒரு இன அழிப்பை வெளிப்படையாகவே முன்னெடுத்து வருவதாகவும், இதனால் அந்த நாட்டுடனான தூதர உறவுகள் அனைத்தையும் துண்டித்துக்கொள்வதாக இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கைது உத்தரவு உறுதி
வெள்ளிக்கிழமை சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்த அவர், இன அழைப்பை ஒருபோதும் நெதன்யாகு நிறுத்தப்போவதில்லை, இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவை உறுதி செய்கிறது என்றார்.
இஸ்ரேலின் காஸா படையெடுப்பால் இறப்பு எண்ணிக்கை 35,000 நெருங்கும் நிலையில், சமீபத்திய மாதங்களில் லத்தீன் அமெரிக்கா நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுடனான உறவில் விரிசல் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |