கொலராடோ தங்கச் சுரங்கத்தில் விபத்து: சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள்!
கொலராடோ தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட லிப்ட் கோளாறில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்தூக்கி விபத்து
வியாழக்கிழமை அமெரிக்காவின் கொலராடோவில் கிரிப்பிள் க்ரீக்கில் உள்ள மோலி கேத்லீன் தங்கச் சுரங்க சுற்றுலா ஈர்ப்பு மையத்தில் நடந்த மின்தூக்கி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பகல் 12 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், பன்னிரண்டு பேர் சுமார் 300 மீட்டர் (1,000 அடி) ஆழத்தில் சிக்கியிருந்தனர்.
மணிக்கணக்கான நேரம் சிக்கியிருந்த அவர்கள், வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளனர்.
இரவு, கோளாறு ஏற்பட்ட காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், பொறியாளர்கள் மின்தூக்கியை சோதித்துவிட்டு அதை கீழே திரும்ப அனுப்பியதாகவும் தெரிவித்தார். மரணமடைந்தவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
மோலி கேத்லீன் தங்கச் சுரங்கம்
டென்வரின் தெற்கே சுமார் 110 மைல்கள் தொலைவில் உள்ள மோலி கேத்லீன் தங்கச் சுரங்கம் 50 ஆண்டுகளாக சுற்றுலாப் பயணங்களை வழங்கி வருகிறது.
1800 களின் பிற்பகுதியில் திறக்கப்பட்டு, 1961 இல் மூடப்பட்டது.
கீழ் பகுதிக்குச் செல்லும் பயணம் சுமார் இரண்டு நிமிடங்கள் ஆகும், சுற்றுலாப் பயணிகள் பாறையில் உள்ள தங்க நரம்புகளைப் பார்க்கவும், நிலத்தடி ட்ராம் பயணம் செய்யவும் முடியும் என்று சுரங்கத்தின் வலைத்தளம் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |