அது தவறான முடிவு தான்... மன்னிப்பு கேட்ட ஈரான் பிரபலம்
தடை ஏறும் போட்டியில் ஈரான் வீராங்கனை எல்னாஸ் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார்.
நாடு திரும்புவதைத் தொடர்ந்து தனது செயலுக்காக எல்னாஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஹிஜாப் அணியாமல் சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை தற்போது நாடு திரும்புவதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஈரானில் ஹிஜாப் விவகாரம் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வைத்துள்ளது. இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டத்திலிருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
@reuters
இந்த நிலையில் அக்டோபர் 16 ம் திகதி தென்கொரியாவில் நடந்த தடை ஏறும் போட்டியில் ஈரான் வீராங்கனை எல்னாஸ் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார். மாஷா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எல்னாஸ் ஹிஜாப் அணிய மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக எல்னாஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் நாடு திரும்புவதைத் தொடர்ந்து தனது செயலுக்காக எல்னாஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
@AP
இதுகுறித்து எல்னாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பொருத்தமற்ற நேரத்தாலும், எதிர்பாராத விதமாக போட்டியில் பங்கேற்க தன்னை அழைத்ததாலும், தற்செயலாக தலையை மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கான நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.