உலகின் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் 2026: இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்த நகரம்
உலகின் நகரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கலாச்சாரம் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன.
Economist Intelligence Unit (EIU) வெளியிட்ட 2026-ஆம் ஆண்டுக்கான பட்டியலில், டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் (Copenhagen) உலகின் மிகச் சிறந்த வாழ்வதற்கு ஏற்ற நகரமாகத் தேர்வாகியுள்ளது.
கோபன்ஹேகன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. நிலைத்தன்மை, அடிப்படை வசதிகள், கல்வி ஆகிய துறைகளில் சரியான (perfect) மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. சுத்தமான சூழல், உயர்ந்த தரமான பொது சேவைகள், கலாச்சார வளம் ஆகியவை இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இரண்டாம் இடத்தில் வியன்னா (ஆஸ்திரியா) உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த வியன்னா, இப்போது கோபன்ஹேகனுக்கு அடுத்ததாக உள்ளது.
மூன்றாம் இடத்தில் மெல்போர்ன் (அவுஸ்திரேலியா), நான்காம் இடத்தில் சிட்னி (அவுஸ்திரேலியா), ஐந்தாம் இடத்தில் சூரிச் (சுவிட்சர்லாந்து) ஆகியவை உள்ளன.
டாப் 10 நகரங்களில் அடுத்த 5 இடங்களில் ஜெனீவா (சுவிட்சர்லாந்து), ஓசாகா (ஜப்பான்), அடிலெய்டு (அவுஸ்திரேலியா), வாங்கூவர் (கனடா), டோக்கியோ (ஜப்பான்) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவில், ஹோனலுலு 25-வது இடத்தில் இருந்தாலும், அது அமெரிக்காவின் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற நகரமாக உள்ளது. நியூயார்க் குற்றச்செயல்கள் குறைந்ததால் மூன்று இடங்கள் முன்னேறி 66-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆசியாவில், ஓசாகா 7-வது இடத்தில் முன்னணியில் உள்ளது. சீன நகரங்கள் சுகாதார வசதிகள் மேம்பாட்டால் தரவரிசையில் முன்னேறியுள்ளன.
இப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ள நகரம், டமாஸ்கஸ் (சிரியா). போர் மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக தெஹ்ரான் (ஈரான்), கீவ் (உக்ரைன்) போன்ற நகரங்கள் பின்தள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு, நகரங்கள் எவ்வாறு மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் முதலீடு செய்வது, நகரங்களை உலகின் முன்னணியில் நிறுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |