அழகாக தெரிய செய்துகொண்ட அறுவை சிகிச்சை... நூற்றுக்கணக்கானோருக்கு மூளை பாதிப்பு
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அதிகாரிகள் தரப்பு உலக சுகாதார அமைப்பிடம் பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்க முன்வைத்த கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சையால் பூஞ்சை நோய் பாதிப்பு
மெக்சிகோவில் முன்னெடுக்கப்பட்ட முகப்பொலிவுக்கான அறுவை சிகிச்சையால் பூஞ்சை நோய் பாதிப்பு பெருமளவில் கண்டறியப்பட்டதை அடுத்தே அதிகாரிகள் தரப்பு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தொடர்புடைய அறுவை சிகிச்சை முன்னெடுத்த இருவர் மூளை பாதிப்பால் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் கிட்டத்தட்ட 400 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Credit: Abraham
மட்டுமின்றி, மெக்சிகோ நகரமான மாடமோரோஸில் இரண்டு அழகுகலை தொடர்பான கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் ஜனவரி முதல் முகப்பொலிவுக்கான அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட மக்கள் உடனடியாக மருத்துவர்களை நாடி ஆலோசனை பெறவும் அதிகாரிகள் தரப்பு கோரியுள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் தற்போது 25 பேர்கள் பூஞ்சை மூளைக்காய்ச்சல் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அமெரிக்க மக்கள் பலர் முகப்பொலிவுக்கான அறுவை சிகிச்சைகள் மற்றும் உதடு, மார்பு உள்ளிட்ட பாகங்கள் மெருகூட்டவும் சிகிச்சைக்காக மெக்சிகோ சென்றுள்ளனர்.
மயக்க மருந்து ஊசியால் 39 பேர்கள் மரணம்
இந்த சிகிச்சைக்கு என முதுகெலும்பு சுற்றியுள்ள பகுதியில் ஒரு மயக்க மருந்து ஊசி செலுத்தப்படுகிறது. இதுவே தற்போது பூஞ்சை மூளைக்காய்ச்சல் பாதிப்பை மக்களில் ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சிசேரியன் முறைப்படியான மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்து ஊசியால் மெக்சிகோவில் 39 பேர்கள் மரணமடைந்தனர்.
பூஞ்சை மூளைக்காய்ச்சலின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறி தலைவலி, அதைத் தொடர்ந்து காய்ச்சல், வாந்தி, கழுத்து வலி மற்றும் மங்கலான பார்வை என மருத்துவர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர்.