இலங்கையர் தாக்குதல் நடத்திய சூப்பர் மார்க்கெட்டின் நிலை என்ன? வேதனையுடன் கூறிய பாதுகாப்பு பொதுமேலாளர்
நியூசிலாந்தில் இலங்கையர் நடத்திய கத்தி குத்து சம்பவத்தில், தங்கள் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக சூப்பர் மார்க்கெட்டின் பாதுகாப்பு பொதுமேலாளர் கூறியுள்ளார்.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருக்கும் Countdown LynnMall சூப்பர் மார்க்கெட்டில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு திடீரென்று உள்ளே நுழைந்த 32 வயது மதிக்கத்தக்க இலங்கையர் ஒருவர் நடத்திய கத்தி குத்து சம்பவத்தில், 6 பேர் காயமடைந்தனர்.
மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் தீவிரவாத கருத்துக்களால் பொலிசாரிடம் சிக்கியவர்.
இந்நிலையில், இந்த கொடூர தாக்குதல் குறித்து Countdown LynnMall-ன் பாதுகாப்பு மேலாளர் Kiri Hannifin கூறுகையில், ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த வன்முறை சம்பவம் காரணமாக கடும் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளோம்.
எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என்ன நடந்தது என்பதை நேரில் கண்டாவர்கள், அவர்களுக்கு அது எப்படி இருக்கும் என்று நினைக்கும் போதே அச்சமாக இருக்கிறது.
இந்த சம்பவம் காரணமாக காயம் அடைந்த குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்போம். கொரோனா காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஊழியர்களும் சிறப்பான தங்கள் பங்களிப்பை செய்து வந்தனர்.
ஆனால், இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் எங்கள் கடை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரியும், ஆனால் இப்போதைக்கு எங்கள் நிறுவனம் தொடர்பான சூப்பர் மார்க்கெட் திறக்கப்படாது.
நாளை காலை 10 மணிக்கு திறக்கப்படும். எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே முக்கியம், இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து கூற, பொலிசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கூறியுள்ளார்.