முத்தம் கொடுப்பது சட்டவிரோதம்: முத்தங்களுக்கு தடை விதித்துள்ள நாடுகளின் பட்டியல்
முத்தம் என்பது உறவுகள் கடந்து அன்பை வெளிப்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டாலும் சில நாடுகளில் பொது இடங்களில் முத்தமிட்டால் அது குற்றமாக பார்க்கப்படுகிறது.
அன்பை வெளிப்படுத்தும் முத்தம்
முத்தம் என்பது உறவுகள் கடந்து அனைவருக்கும் தங்கள் அன்பை பாரபட்சம் இல்லாமல் தூய்மையாக வெளிப்படுத்த உதவக் கூடிய ஒன்றாக திகழந்து வருகிறது.
இங்கு காதலர்கள் கொடுக்கும் முத்தங்களும், தாய் தன்னுடைய குழந்தைகளுக்கு கொடுக்கும் முத்தங்களும் அன்பை வெளிப்படுத்தும் முறையாகவே உள்ளது.
இப்படிப்பட்ட முத்தத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜூலை 6ம் திகதி சர்வதேச முத்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இருப்பினும் பல்வேறு நாடுகளில் பொது இடங்களில் முத்தத்தை பகிர்ந்து கொள்வது என்பது தடை செய்யப்பட்டுள்ளது, சில சமயங்களில் இந்த தடையை மீறியவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படுகிறது.
முத்தத்திற்கு தடை விதித்துள்ள நாடுகள்
ஐக்கிய அரபு அமீரகம்
பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துவது தடை செய்யப்பட்ட செயலாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சில நாடுகளில் இதற்கு 1-3 ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனைகள் கூட விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் பொது இடங்களில் முத்தங்களை கொடுத்து அன்பை பகிர்வது சட்டவிரோதமான செயலாக பார்க்கப்படுகிறது.
iStock
சீனா
சீனாவில் முத்தம் என்பது பாலியல் உறவு சம்பந்தப்பட்ட ஒன்றாக பார்க்கப்படுவதால் அவை அந்தரங்கமான இடங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, சீனாவில் அன்பின் பொது இட வெளிப்பாடு (PDA)தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தியா
அன்பை வெளிப்படுத்தும் முத்தத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
இந்திய தண்டனை சட்டம் 294ன் படி பொது இடங்களில் கைகோர்த்து செல்வது குற்றமில்லை, ஆனால் ஆபாசமாக நடந்து கொள்வது ஆபாச வார்த்தைகள் உபயோகிப்பது, வாசிப்பது, பாடல்களாக பாடுவது குற்றமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு குறைந்தது 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.
பிற நாடுகள்
மேல் குறிப்பிட்ட நாடுகளை போல இந்தோனேசியா, வியட்நாம், ஜிம்பாப்வே, ஆகிய நாடுகளிலும் பொது இடங்களில் அன்பை முத்தங்கள் மூலம் வெளிப்படுத்துவது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |