இந்த நாடுகளில் எலோன் மஸ்கின் டுவிட்டர் சேவையை பயன்படுத்த முடியாது... புதிதாக சேர்ந்த பிரேசில்
பிரேசில் நாட்டில் சனிக்கிழமை முதல் எலோன் மஸ்கின் டுவிட்டர் சேவையை பயனர்கள் எவரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அதிருப்தியாளர்கள்
உலகில் குறிப்பிட்ட சில நாடுகள் டுவிட்டர் சேவையை தங்கள் குடிமக்கள் சட்டப்பூர்வமாக பயன்படுத்த தடை விதித்துள்ளது. பெரும்பாலான இந்த நாடுகள் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதாகவே கூறப்படுகிறது.
மேலும், மொத்தமாக தடை செய்வதை தெவிர்த்து, சில நாடுகள் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. பொதுவாக அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை பதிவு செய்யவே அரசியல் அதிருப்தியாளர்கள் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
2011ல் எகிப்து, 2014 மற்றும் 2023ல் துருக்கி, 2021ல் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் டுவிட்டர் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். சீனாவில் 2009ல் இருந்தே டுவிட்டர் சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
சீன தலைநகரில் அமைந்துள்ள Tiananmen சதுக்கத்தில் 20ம் ஆண்டு நினைவேந்தல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க மக்கள் திரண்ட நிலையில், சீன அரசாங்கம் டுவிட்டர் உட்பட வெளிநாட்டு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்ததுடன், பின்னர் நிரந்தரமாக தடை விதித்தது.
அதன் பின்னர் மக்கள் உள்ளூர் சமூக ஊடக சேவைகளை நாடினர். ஈரானில் 2009ல் இருந்தே டுவிட்டர் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தடை விதிக்கப்பட்ட சேவையானது,
நாள் ஒன்றிற்கு 8,900 டொலர்
அதன் பின்னர் பொதுமக்களால் பயன்படுத்தப்படவில்லை. 2010 காலகட்டத்தில் மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தான் டுவிட்டர் சேவையை தடை செய்தது. வடகொரியாவில் டுவிட்டர் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளது.
மியான்மரில் 2021 பிப்ரவரி முதல் டுவிட்டர் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் 2022 மார்ச் முதல் டுவிட்டர் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான ரஷ்ய மக்கள் சட்டவிரோதமாக சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் டுவிட்டர் சேவையை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பல முறை முடக்கப்பட்டுள்ளது. வெனிசுலா நாட்டில் அரசியல் நெருக்கடியை அடுத்து ஆகஸ்டு 9ம் திகதி முதல் 10 நாட்களுக்கு டுவிட்டர் சேவை முடக்கப்பட்டது.
ஆனால் தற்போதும் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரேசில் நாட்டின் உச்ச நீதிமன்றம் டுவிட்டர் சேவைக்கு தடை விதித்து சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், VPN சேவையை பயன்படுத்தி டுவிட்டர் பயன்படுத்தப்பட்டால், நாள் ஒன்றிற்கு 8,900 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |