வர்த்தக தடையால் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த உணவு பண்டங்களின் விலை: நெருக்கடியில் மக்கள்
இராணுவ ஆட்சி கவிழ்ப்பை அடுத்து நைஜர் நாட்டில் அத்தியாவசிய உணவு பண்டங்களின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை நாடுகள் தடை
நைஜர் நாட்டுடனான வர்த்தகத்திற்கு மேற்கு ஆப்பிரிக்க அண்டை நாடுகள் தடை விதித்துள்ளதை அடுத்தே இந்த விலை உயர்வு என கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சந்தை ஒன்றில் ஒரு மூட்டை அரிசியின் விலை மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உயர்ந்து தற்போது 25 டொலருக்கு விற்பனையாவதாக கூறுகின்றனர்.
இது பொருளாதார ரீதியாக மக்களை கடுமையாக பாதித்துள்ளதுடன், மக்கள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பண்டங்களை வாங்கி சேமிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஆட்சி கவிழ்ப்புக்கு முன்னிலை வகித்த தலைவர் Abdourahamane Tiani தெரிவிக்கையில், வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் எதிர்வரும் வாரங்கள், மாதங்களுக்கு இருக்கும் எனவும், நைஜர் மக்கள் ஒருங்கிணைந்து அவற்றை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் இதுவரை அவசர அவசரமாக உணவு பண்டங்களை வாங்கிக் குவிக்க துவங்கவில்லை எனவும் ஆனால் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இறுக்கமான சூழலை உணர்ந்துள்ளதாகவே கூறுகின்றனர்.
@AFP
அரிசி விலை 40 சதவீதம் அதிகரிப்பு
சில நாட்களுக்கு முன்னர் 22,000 CFA தொகைக்கு விற்பனையான ஒரு கேன் எண்ணெய் தற்போது 33,000 CFA தொக்கு விற்கப்படுகிறது. இருப்பினும், குறிப்பிட்ட சிலர் ஆட்சி கவிழ்ப்பையும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வையும் ஆதரிப்பதுடன், புதிய அரசாங்கம் அமைவதை வரவேற்றுள்ளனர்.
ஏற்கனவே, மொத்தமுள்ள 26 மில்லியன் மக்களில் சுமார் 3.3 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறை மற்றும் முழு நேர பட்டிணியை எதிர்கொண்டுவரும் நிலையில் தற்போது வர்த்தக தடைகளும் ஆட்சி கவிழ்ப்பும் அரங்கேறியுள்ளது.
@AFP
மேலும், ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கு இடையில் அரிசியின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சில சுற்றுவட்டாரங்களில் பொருட்கள் மற்றும் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதனிடையே, பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே நைஜருக்கு உதவிகளை குறைத்துள்ளன, அதன் பட்ஜெட்டில் 40 சதவீதம் வெளிநாட்டு உதவிகளையே நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1 அமெரிக்க டொலர் என்பது 597 CFA தொகைக்கு நிகராகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |