உணவகத்தில் தம்பதிகளின் மோசமான செயல்..!வீடியோவை வெளியிட்டு ஹோட்டல் நிர்வாகம் வேண்டுகோள்
ஹோட்டல் ஒன்றில் இலவச உணவிற்காக தம்பதி ஒருவர் செய்யும் மோசமான செயல் குறித்த வீடியோ இணைய தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தம்பதியினரின் மோசமான செயல்
சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் தம்பதி ஒருவரின் மிகவும் மோசமான செயல் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், உணவகம் ஒன்றில் தம்பதி ஒருவர் உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்கின்றனர்.
அதன் பிறகு, அந்த பெண் தனது தலையில் உள்ள மூடியை எடுத்து உணவில் போட்டு விட்டு, சாப்பாட்டில் தலைமுடி கிடப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் உணவுக்கு செலுத்திய பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளனர்.
ஹோட்டல் நிர்வாகம் வேண்டுகோள்
இந்நிலையில் தம்பதியின் செயலை சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்த உணவக நிர்வாகம், தங்களது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
அத்துடன் நாம் யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபட கூடாது எனவும், இத்தகைய செயல்கள் நல்ல உணவகங்களின் நற்பெயர்களை பாதிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சமூக ஊடகத்தில் இந்த வீடியோ பார்த்த நபர்கள், தம்பதியின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |