சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுவதாக.,விஜயலட்சுமி பிராமண பத்திரம் தாக்கல்
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அறிக்கை தாக்கல்
கடந்த 2011ஆம் ஆண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சீமான் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனையும் எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு
இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக சீமான் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல் விஜயலட்சுமி தரப்பில் இருந்தும் சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இதன் காரணமாக சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், விஜயலட்சுமிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசிய வீடியோக்களை நீக்கவும், சீமான் தரப்பு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |