ஜனாதிபதியை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
இராணுவ சட்டத்தை விதித்த தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலினை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் கொரியாவில் ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) அவசரநிலையை பிரகடனப்படுத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து ஜனாதிபதி யூன் தனது உத்தரவை திரும்பப் பெற்றார். எனினும் அவரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தன.
அதன் பின்னர் யூனின் அதிகாரங்கள் இடைநிறுத்தப்பட்டன. இடைக்கால ஜனாதிபதியாக ஹாங் டக் சோ நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அதிகாரத்தை பயன்படுத்தி அவசரநிலையை பிரகடனப்படுத்திய ஜனாதிபதி யூன் சுக் யோலினை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |