குழந்தைக்கு யார் பெயர் வைப்பது? கணவன், மனைவி சண்டையை தீர்த்து வைத்த நீதிமன்றம்
இந்திய மாநிலம் கேரளாவில் குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதை நீதிமன்றம் தீர்த்து வைத்தது.
பெயர் வைப்பதில் சிக்கல்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தை 'புன்யா நாயர்' என வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், தாயார் 'பத்மா நாயர்' என பெயரிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
File Photo
பெயர் வைத்த நீதிமன்றம்
இதனால் குறித்த தம்பதி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி 'Parens Patriae' இனி அதிகார வரம்பைப் பயன்படுத்தியுள்ளது.
அதன்படி இரு பெயரையும் ஏற்கும் வகையில் 'புன்யா பாலகங்காதரன் நாயர்' என குழந்தைக்கு நீதிமன்றம் பெயர் சூட்டியது.
அத்துடன், அதிகார வரம்பைப் பயன்படுத்தும்போது குழந்தையின் நலனைக் கருத்தில் வேண்டும். பெயரை தெரிவு செய்வது பெற்றோரின் உரிமைகள் அல்ல, குழந்தைக்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கும் பணியை நீதிமன்றம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.
Representational Image
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |