பிரபல நடிகரின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட நீதிமன்றம் தடை
பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேன் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் உலர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அவர்களுடைய உடல்களின் படங்களை ஊடகங்களில் வெளியிட நீதிமன்றம் நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது.
உலர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள்
ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது மனைவியான பெற்சியும் (Betsy Arakawa, 63), அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள Santa Fe என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த நிலையில், பிப்ரவரி மாதம் இருவரும் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
அதுவும், அவர்கள் இருவரும் எப்போது உயிரிழந்தார்கள் என்பது தெரியாத நிலையில், மம்மியாக்கப்பட்ட அதாவது உலர்ந்த நிலையில் அவர்களுடைய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட நீதிமன்றம் தடை
இந்நிலையில், உலர்ந்த நிலையில் காணப்பட்ட ஜீன் ஹாக்மேன் மற்றும் அவரது மனைவியான பெற்சி ஆகியோரின் உடல்களின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட Santa Fe நீதிமன்ற நீதிபதி ஒருவர் தடை விதித்துள்ளார்.
பொதுவாக, அதிகாரிகளின் விசாரணையின்போதும், மருத்துவ நிபுணர்கள் மேற்கொள்ளும் உடற்கூறு ஆய்வின்போதும் எடுக்கப்படும் புகைப்படங்கள், நியூ மெக்சிகோ மாகாண சட்டப்படி பொது ஆவணங்களாக கருதப்படும்.
ஆனால், ஜீன் ஹாக்மேன் குடும்பத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர், அவரது குடும்பத்தின் தனியுரிமை கருதி அந்த புகைப்படங்களை வெளியிட தடை கோரியுள்ளார்.
[Gene
ஜீன் ஹாக்மேனும் அவரது மனைவியும் உயிருடன் இருக்கும்போதே நீண்ட காலமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் வாழ முடிவு செய்து அப்படியே கடைசிவரை வாழ்ந்துவந்தார்கள்.
ஆக, அதுவே அவர்களுடைய மரணத்துக்குப் பின்பும் தொடரவேண்டும் என்று அவர்கள் தரப்பு சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |