கன்னட மொழி குறித்து கருத்து கூற நடிகர் கமல்ஹாசனுக்கு தடை
நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிராக கருத்து தெரிவிக்க பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கன்னட மொழி குறித்து கருத்து
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைஃப்' திரைப்படம் வெளியானது. இப்படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்துதான் உருவானது என பேசியிருந்தார்.
இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தனது கருத்திற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால், அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதால், தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகிவில்லை.
இதனைத் தொடர்ந்து, கன்னட இலக்கிய துறையின் தலைவர் மகேஷ் ஜோஷி, பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார்.
தடை
அதில் கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்து பேச்சு வேதனை அளிப்பதாகவும், இதுபோன்ற பேச்சுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கன்னட மொழியை விட மற்ற மொழி சிறந்தது என்பன போன்ற கருத்துகளையும், கன்னட மொழிக்கு எதிரான கருத்துகளை கூறுவதற்கும், அதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடவும், அறிக்கைகளை வெளியிடுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும் கன்னட மொழி, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிடவும் நடிகர் கமல்ஹாசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |